TNPSC Thervupettagam
May 28 , 2026 2 days 68 0
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் சிறந்த செயல்பாட்டைக் கௌரவிப்பதற்காக 2026 ஆம் ஆண்டிற்கான சன்சத் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்த விருதுகளானது அவர்களின் நாடாளுமன்ற செயல்பாட்டிற்காக 10 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 4 நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு வழங்க அங்கீகாரம் அளித்துள்ளன.
  • முக்கிய விருது பெற்றவர்களில் ஸ்மிதா உதய் வாக், மேதா குல்கர்னி, ஜெகதாம்பிகா பால் மற்றும் நிஷிகாந்த் துபே ஆகியோர் அடங்குவர்.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் தூண்டுதலால், பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் 2010 ஆம் ஆண்டில் இந்த விருது தோற்றுவிக்கப் பட்டது.
  • விவாதங்கள், கேள்விகள், வருகைப்பதிவு, குழு பங்கேற்பு மற்றும் தனிநபர் மசோதாக்கள் போன்ற அதிகாரப்பூர்வ நாடாளுமன்றத் தரவுகளின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்