சன்ரைஸ் திட்டம் - மிக நீண்ட பயணத் தொலைவு கொண்ட இடை நில்லா விமானம்
October 22 , 2019 2094 days 787 0
ஆஸ்திரேலியாவின் கொடியைத் தாங்கிப் பறந்த விமானமான குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானமானது நியூயார்க்கில் இருந்து சிட்னிக்கு உலகின் மிக நீண்ட பயணத் தொலைவு கொண்ட வணிக விமானப் பயணத்தை நிறைவு செய்தது.
ஏறக்குறைய 20 மணி நேரம் பயணித்த இந்த உலகின் மிக நீண்ட வணிக விமானப் பயணமானது விமானிகள், பணியாளர்கள் மற்றும் பயணிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை குவாண்டாஸ் ஆய்வு செய்தது.
குவாண்டாஸ், தனது சன்ரைஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று நீண்ட பயணத் தொலைவு விமானங்களை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து லண்டன் மற்றும் நியூயார்க்கிற்கு இடைநில்லாமல் செல்லும் வர்த்தக விமானங்களைத் தொடர்ந்து இயக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.