June 18 , 2019
2209 days
702
- இந்தியா மற்றும் மியான்மர் நாட்டு இராணுவத்தினர் இணைந்து அவரவர் எல்லைப் பகுதியில் மூன்று வார காலத்திற்கு ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
- இந்த கூட்டுப் பயிற்சிக்கு சன்ரைஸ் – 2 நடவடிக்கை எனப் பெயரிடப்பட்டது.
- அசாம் ரைபிள்ஸ் படையினரும் இந்த நடவடிக்கையில் இணைந்துக் கொண்டனர்.
- இவர்கள் மணிப்பூர், நாகலாந்து மற்றும் அசாம் பகுதியில் செயல்படும் பல தீவிரவாதக் குழுக்களை குறிவைத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
- மியான்மரானது அசாம், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாகலாந்து மற்றும் மணிப்பூருடன் 1640 கி.மீ. நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
Post Views:
702