TNPSC Thervupettagam

சபஹார் துறைமுகத்திற்கான அமெரிக்காவின் விலக்கு

May 4 , 2026 16 hrs 0 min 39 0
  • சபஹார் துறைமுகத்தின் மீதான தடைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கை அமெரிக்கா 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • ஈரான் வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவை இணைக்கும் இந்தியாவின் இணைப்புத் திட்டத்தில் இது நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது.
  • இந்தியா தனது பங்கை மறுபரிசீலனை செய்து வருவதுடன், 120 மில்லியன் டாலர் முதலீட்டை முன்கூட்டியே செலுத்திவிட்டு தனது பணியாளர்களை திரும்பப் பெற்று உள்ளது.
  • ஈரானின் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சபஹார் துறைமுகம், பாகிஸ்தானைத் தவிர்த்து பிற நாடுகளை அணுகுவதற்கான வழியை வழங்குகிறது.
  • மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடனான வர்த்தகத்திற்காக சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித் தடத்துடன் (INSTC) இது இணைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்