TNPSC Thervupettagam

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்

March 14 , 2026 3 days 58 0
  • சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தள்ளுபடி செய்யப்பட்டது.
  • இதற்காக மக்களவையில் 12 மணி நேர விவாதம் நடைபெற்றது.
  • சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப்படும்போது, வழக்கமாக சபாநாயகர் தலைமை நாற்காலியில் அமர மாட்டார்.
  • இந்த அரிய தீர்மானங்கள் 1954 (ஜி.வி. மாவலங்கருக்கு எதிராக), 1966 (ஹுகம் சிங்கிற்கு எதிராக) மற்றும் 1987 (பால்ராம் ஜாக்கருக்கு எதிராக) ஆகிய ஆண்டுகளில் நடந்தன.
  • இந்தத் தீர்மானத்தின் அனைத்து நிகழ்வுகளிலும், சபையானது மற்ற அதிகாரிகளால் 14 நாட்கள் தலைமை தாங்கப்பட்டது.
  • சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதியில் ஏற்றுக் கொள்ளப் பட்டதிலிருந்து, சபாநாயகர் மக்களவைக்கு தலைமை தாங்குவதைத் தவிர்த்து வருகிறார்.
  • இந்த விவாதத்தின் போது சபையின் தலைமை அலுவலராக இருந்தவர் பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் ஆவார்.
  • சபையில் வாக்கெடுப்பை ஜகதாம்பிகா பால் கோரிய நிலையில், இது குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானத்தை நிராகரித்தது.
  • சபை ஒழுங்கு முறையாக இல்லாததால் வாக்குப் பிரிவினை கோரப்படவில்லை.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பிரிவு 94(c) இன் படி, மக்களவையின் அனைத்து உறுப்பினர்களின் பெரும்பான்மையினரால் (செயல்படும் பெரும்பான்மை) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் மட்டுமே சபாநாயகரை நீக்க முடியும் என்பதோடு அப்பதவி வெறும் வருகை தந்து வாக்களிப்பவர்கள் (எளிய பெரும்பான்மை) என்ற முறையின் மூலம் நீக்க முடியாது.
  • ஒரு உறுப்பினர் மக்களவையின் பொதுச் செயலாளருக்கு அவரின் நீக்கம் கோரி ஒரு எழுத்துப் பூர்வ அறிவிப்பை சமர்ப்பிக்கும் போது இச்செயல்முறை தொடங்குகிறது.
  • சபாநாயகரை நீக்குவதற்கான தீர்மானத்தை முன்மொழிய குறைந்தபட்சம் இரண்டு மக்களவை உறுப்பினர்கள் அறிவிப்பில் கையெழுத்திட வேண்டும்.
  • எந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் வேண்டுமானாலும் அறிவிப்பில் கையெழுத்திடலாம், ஆனால் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் கையொப்பம் அதற்குக் கட்டாயமாகும்.
  • தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு குறைந்தது 14 நாட்கள் அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.
  • அது ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், சபையில் விவாதத்திற்குச் செல்ல குறைந்தது 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
  • இந்தச் செயல்முறையை நிர்வகிக்கும் நடைமுறை கட்டமைப்பு மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளில், குறிப்பாக விதிகள் 200 முதல் 203 வரையிலான விதிகளில் வகுக்கப்பட்டுள்ளது.
  • அத்தீர்மானம் சபாநாயகருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று விதிகள் கட்டளையிடுகின்றன.
  • அத்தகைய தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, சபாநாயகர் சபையின் உறுப்பினராக நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.
  • முதல் கட்டத்திலேயே சபாநாயகர் தீர்மானத்தின் மீது வாக்களிக்க முடியும் என்றாலும், சமநிலை ஏற்பட்டால் அவர் அதன் மீது வாக்களிக்க முடியாது.
  • சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் பரிசீலனையில் இருக்கும்போது, அவர் அவைக்குத் தலைமை தாங்குவதை அரசியலமைப்பின் 96வது பிரிவு தடை செய்கிறது.
  • மக்களவையில் தீர்மானம் விவாதிக்கப்பட்டால், சபாநாயகருக்கு அவையில் தன்னைத் தற்காத்துக் கொள்ள அரசியலமைப்பு உரிமை அவருக்கு உண்டு.
  • முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் தன்மை பொதுவாக துணை சபாநாயகரால் ஆராயப் படுகிறது, ஆனால் தற்போதைய மக்களவையில் துணை சபாநாயகர் இல்லாததால், தலைவர் குழுவின் மூத்த உறுப்பினரால் அது ஆராயப்படலாம்.
  • சபாநாயகர் இல்லாத நேரத்தில் சபையை நடத்த தலைவர்கள் குழு உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்