பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது (MoPR) 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதியன்று நாடு தழுவிய சப்கி யோஜனா சப்கா விகாஸ் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது.
2026–27 ஆம் ஆண்டிற்கான பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களை (PDPs) தயாரிப்பதற்கான 2025–26 ஆம் ஆண்டு மக்கள் திட்டப் பிரச்சாரத்தின் (PPC) தொடக்கத்தைக் குறித்தது.
2019–20 ஆம் ஆண்டு முதல், eGramSwaraj தளத்தில் 18.13 லட்சத்திற்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
2025–26 ஆம் ஆண்டு சுற்றுக்கு, தளத்தின் தரவுகளின் படி 2.52 லட்சத்திற்கும் அதிகமான திட்டங்கள் ஏற்கனவே பதிவேற்றப் பட்டுள்ளன.
eGramSwaraj மற்றும் Panchayat NIRNAY போன்ற தளங்களைப் பயன்படுத்தி முந்தைய திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்காக அக்டோபர் 02 ஆம் தேதியன்று சிறப்பு கிராம சபைகள் நடத்தப்பட்டன.