TNPSC Thervupettagam

சப்த தாரா கட்டமைப்பு

August 17 , 2026 16 hrs 0 min 64 0
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி சப்த தாரா (சக்தியின் சப்ததாரா) கட்டமைப்பை அறிமுகப் படுத்தினார்.
  • இது தேசிய வளர்ச்சியின் ஏழு முக்கியப் பகுதிகளை உள்ளடக்கி, 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த பாரதம் (விக்சித் பாரத்) என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உற்பத்தி, விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள், கதி சக்தி, பாதுகாப்பு சுயசார்பு, பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் இந்தியாவின் மென்திறன் (soft power) ஆகியவை அந்த ஏழு பகுதிகளாகும்.
  • தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் கீழ், அடுத்த ஓராண்டில் 1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் (AI) பயிற்சி அளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
  • 2047 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது, மேலும் அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் ஐந்து புதிய அணு உலைகள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்