ஐதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள 216 அடி உயர சமத்துவச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் சுவாமிகளால் இந்த சிலையானது கருத்துருவாக்கப்பட்டது.
பக்தி இயக்கத் துறவி ராமானுஜாச்சாரியாரின் 1000வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் 12 ஆம் நாளான ஸ்ரீ ராமானுஜ சஹஸ்ராப்தி சமரோஹத்தின் ஒரு பகுதியாக இந்தச் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
‘பஞ்சலோஹா’ என்ற ஐந்து உலோகங்களின் ஒரு கலவையைக் கொண்டு இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அவை தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை மற்றும் துத்தநாகம் ஆகியவை ஆகும்.
இது உலகில் உள்ள அமர்ந்த நிலையில் உள்ள மிக உயரமான உலோக சிலைகளில் ஒன்றாக திகழ்கிறது.
216 அடி உயரமுள்ள இந்த ‘சமத்துவச் சிலையானது ‘பத்ர வேதி’ எனப்படும் 54 அடி உயர ஒரு அடித்தளக் கட்டிடத்தின் மீது நிறுவப்பட்டுள்ளது.