TNPSC Thervupettagam

சமயச் சுதந்திர மசோதா 2026

March 20 , 2026 12 hrs 0 min 26 0
  • கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதற்காக மகாராஷ்டிரா மத சுதந்திர மசோதா 2026-ஐ அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதா மதமாற்றங்களை ஒழுங்குபடுத்துவதையும், கட்டாயம், மோசடி அல்லது தூண்டுதல் இன்றித் தானாக முன்வந்து மதமாற்றம் நடப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சட்டவிரோத மதமாற்ற நடவடிக்கைகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை இது வழங்குகிறது.
  • சிறார்கள், பெண்கள், பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினரை (ST) உள்ளடக்கிய வழக்குகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் அபராதங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  • இந்தச் சட்டம் என்பது திருமணம் மூலமான மதமாற்றங்கள் மற்றும் கூட்டு மத மாற்றங்களையும் உள்ளடக்கி, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டப் பொறுப்புக் கூறலை உறுதி செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்