நாட்டில் கோவிட் – 19 தொற்று நோய் குறித்தப் பிரச்சினையைக் களைவதற்காக “சமாதன்” என்ற ஒரு போட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் (MHRD - Ministry of Human Resource Development) தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்நேரப் போட்டியானது போர்ஜ் அமைப்புடன் இணைந்து MHRD-ன் புத்தாக்கப் பிரிவு மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றினால் தொடங்கப் பட்டுள்ளது.
இது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சோதனைகளை மேற்கொண்டு, கோவிட் – 19 தொற்றிற்கு எதிரான தீர்வுகளைக் கண்டறிய மாணவர்களை ஊக்கப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.