சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தினை அடையாளம் காணுதல் – மத்திய அரசு
May 8 , 2021 1559 days 632 0
சமீபத்தில் உச்சநீதிமன்றமானது சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தினரை அடையாளம் காணுதல் குறித்த முடிவுகளை குடியரசுத் தலைவர் மட்டுமே மேற்கொள்ள இயலும் என்று கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பானது 102வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிலைநிறுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தினரை நிர்ணயம் செய்வதற்கான மாநில அரசுகளின் அதிகாரங்களை 102வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பறித்து விட்டதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
102வது அரசியலமைப்புச் திருத்தச் சட்டமானது சட்டப் பிரிவு 338B மற்றும் சட்டப் பிரிவு 342A ஆகியவற்றை அரசியலமைப்பினுள் சேர்த்துள்ளது.
சட்டப் பிரிவு 338B ஆனது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் கடமைகள் பற்றியதாகும்.
சட்டப் பிரிவு 342A ஆனது ஒரு குறிப்பிட்ட சாதியினரை சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப் பட்டவர்கள் என அறிவிப்பதற்கான குடியரசுத் தலைவரின் அதிகாரம் பற்றியதாகும்.