TNPSC Thervupettagam

சமூக நீதியின் நிலை 2025

October 10 , 2025 14 hrs 0 min 33 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது, The State of Social Justice: A Work in Progress என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • 1995 ஆம் ஆண்டில் 250 மில்லியனாக இருந்த உலகளாவிய குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையானது (5 முதல் 14 வயது) 2024 ஆம் ஆண்டில் 106 மில்லியனாகக் குறைந்துள்ளது.
  • உலக மக்கள்தொகையில் 39% ஆக இருந்த தீவிர வறுமை நிலையானது 1995 ஆம் ஆண்டில் 10% ஆகக் குறைந்தது.
  • 1995 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் வேலைவாய்ப்பில் உள்ளோரின் வறுமை நிலையானது 28 சதவீதத்திலிருந்து 7% ஆகக் குறைந்துள்ளது.
  • 1995 ஆம் ஆண்டு முதல் இடைநிலைப் பள்ளி நிறைவு விகிதம் 22% அதிகரித்துள்ளது.
  • 2000 ஆம் ஆண்டு முதல் வேலை தொடர்பான உயிரிழப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
  • முறைசாரா வேலைவாய்ப்பு ஆனது, இன்னும் உலகளாவியத் தொழிலாளர்களில் 58% பேரை பாதிக்கிறது என்பதோடு இது கடந்த 20 ஆண்டுகளில் 2% மட்டுமே குறைகிறது.
  • பாலின தொழிலாளர் வளப் பங்களிப்பு இடைவெளியானது 2005 ஆம் ஆண்டு முதல் 3% குறைந்து 24% ஆக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்