சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட உயிரி எரிபொருள் (பயோ டீசல்)
May 6 , 2021 1690 days 759 0
மத்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் முதன்முறையாக உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்துத் தயாரிக்கப்பட்ட உயிரி எரிபொருள் (பயோடீசல்) வழங்கீட்டினைத் தொடங்கி வைத்தார்.
இது ‘ஆர்வத்தின் வெளிப்பாடு’ என்ற ஒரு திட்டத்தின் கீழ் (Expression of Interest) தொடங்கப் பட்டுள்ளது.
இந்த திட்டமானது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட உயிரி எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்காக இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.
உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயினை சேகரித்து உயிரி எரிபொருளாக (பயோ டீசல்) மாற்றுவதற்கான ஒரு அமைப்பினை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
முதற்கட்டமாக உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் 7% அளவிலான பயோ டீசலானது டீசலுடன் கலக்கப்படுகிறது.