நுகர்வோர் விவகார அமைச்சகமானது, 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், 2011 ஆம் ஆண்டு தாவர எண்ணெய் பொருட்கள் உற்பத்தி மற்றும் கிடைக்கும் அவற்றின் தன்மை (ஒழுங்குமுறை) ஆணையில் திருத்தங்களை மேற் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் சமையல் எண்ணெய் துறையில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல், விநியோக இடையூறுகளைத் தடுத்தல் மற்றும் நியாயமான விலையை உறுதி செய்தல் போன்றவற்றை இந்தத் திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தியா உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் இறக்குமதி நாடாக உள்ளது.
இறக்குமதியில் செம்பனை எண்ணெய்/பாமாயில் 59 சதவீதமும், அதைத் தொடர்ந்து சோயா அவரை எண்ணெய்/சோயாபீன் 23 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் 16 சதவீதமும் அதனதன் பங்கினைக் கொண்டுள்ளன.
2015-16 ஆம் ஆண்டில் 63.2 சதவீதமாக இருந்த இறக்குமதி சார்புநிலையானது, 2021-22 ஆம் ஆண்டில் 54.9 சதவீதமாகக் குறைந்தது.