TNPSC Thervupettagam

சம்ஜௌதா விரைவு இரயில் நிறுத்தம்

August 10 , 2019 2105 days 688 0
  • பாகிஸ்தான், தனது பகுதியில் சமஜௌதா விரைவு இரயில் சேவையை நிறுத்தத் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது.
  • “நட்பு ரீதியிலான விரைவு இரயில்” என்று பொதுவாக அழைக்கப்படும் சம்ஜௌதா விரைவு இரயில் வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில், அதாவது வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப் படுகின்றது.
  • இது இந்தியாவில் தில்லி மற்றும் அட்டாரி ஆகியவற்றுக்கும் பாகிஸ்தானின் லாகூர் ஆகியவற்றுக்கும் இடையே  இயங்குகின்றது.
  • இந்த இரயில் சேவையானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே 1972 ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் 1976 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று தொடங்கியது.
  • சம்ஜௌதா என்ற சொல்லானது இந்தி மற்றும் உருது ஆகிய இரண்டு மொழிகளிலும் “ஒப்பந்தம்” என்பதைக் குறிக்கும்.
தார் விரைவு இரயில்
  • மேலும் பாகிஸ்தான் இந்தியாவுடனான தார் விரைவு இரயில் சேவையையும் நிறுத்தியுள்ளது. இந்த இரயில் இராஜஸ்தான் வாயிலாக இரு நாடுகளையும் இணைக்கின்றது.
  • இந்த இரயிலின்  41 ஆண்டு கால சேவையின்  நிறுத்தத்திற்குப் பின்பு 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று மீண்டும் தனது இரயில் சேவையைத் தொடங்கியது. அன்றிலிருந்து அனைத்து வெள்ளிக் கிழமை இரவுகளிலும் ஜோத்பூரின் பாகத் கீ கோதி இரயில் நிலையத்திலிருந்து கராச்சி வரை இது இயங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்