TNPSC Thervupettagam

சம்பூர்ணதா அபியான் 2.0

February 5 , 2026 12 days 101 0
  • நிதி ஆயோக்கானது, சம்பூர்ணதா அபியான் 2.0 என்பதை ஜனவரி 28 முதல் ஏப்ரல் 14, 2026 வரை மூன்று மாத கால பிரச்சாரமாகத் தொடங்கியுள்ளது.
  • இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம், இந்தியா முழுவதும் உள்ள 112 லட்சியமிகு மாவட்டங்களில் 5 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளிலும் (KPIs) மற்றும் 513 லட்சியமிகு வட்டாரங்களில் 6 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளிலும் முழுமையான இலக்கை அடைவதாகும்.
  • முக்கிய கவனம் செலுத்தப்படும் பகுதிகளில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம், அங்கன்வாடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள், பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கான கழிப்பறைகள் மற்றும் கால்நடைத் தடுப்பூசி ஆகியவை அடங்கும்.
  • மாவட்டங்களும் வட்டாரங்களும் 3 மாத செயல் திட்டங்களைத் தயாரித்து, மாதாந்திர முன்னேற்றக் கண்காணிப்பை மேற்கொண்டு, கள ஆய்வுப் பயணங்களை மேற்கொள்ளும்.
  • இந்த முன்முயற்சியானது சம்பூர்ணதா அபியான் 2024-ஐ அடிப்படையாகக் கொண்டதுடன், லட்சியமிகு மாவட்டங்கள் திட்டம் (2018) மற்றும் லட்சியமிகு வட்டாரங்கள் திட்டம் (2023) ஆகியவற்றின் இலக்குகளையும் ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்