இந்தியக் கடற்படையும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்படையும் அபுதாபியின் கடற்கரையருகே ‘சயத் தல்வார் 2021’ எனும் இரு தரப்பு கடற்படைப் பயிற்சியினை மேற்கொண்டன.
இரு கடற்படைகளுக்குமிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் இணைதிறனை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் முதன்மை நோக்கமாகும்.
இந்தியக் கடற்படையானது ஐ.என்.எஸ். கொச்சி எனும் கப்பலுடன் இரண்டு ஒருங்கிணைந்த ‘சீ கிங் MK42B’ என்ற ஹெலிகாப்டர்களை பாரசீக வளைகுடாவில் நிறுத்தி உள்ளது.