சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் 50வது கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்
July 16 , 2023 728 days 489 0
சரக்கு மற்றும் சேவை வரி சபையின் 50வது கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சமைக்கப்படாத / பொரிக்காத சிற்றுண்டி பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தினை 5% ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
தனிப்பட்டப் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்கான உணவு (FSMP) ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
லின்ஸ்-டோனாவிட்ஸ் கசடுகளைச் சிறப்பான முறையில் பயன்படுத்துவதை நன்கு ஊக்குவிப்பதற்காக, லின்ஸ்-டோனாவிட்ஸ் கசடு மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் ஆனது 18 சதவீதத்திலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
சூதாட்ட விடுதி, குதிரைப் பந்தயம் மற்றும் பல்வேறு இயங்கலை விளையாட்டுகள் ஆகியவற்றிற்கு 28% என்ற அளவில் ஒரே மாதிரியான வரி விதிக்கப் படும்.
இஸ்ரோ நிறுவனத்தினால் வழங்கப்படும் செயற்கைக் கோள் ஏவுதல் சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கினை நீட்டிப்பதற்கு என்று சபையானது பரிந்துரைத்து உள்ளது.
திரையரங்குகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்கள் ‘உணவகச் சேவை’யின் கீழ் வருவதால் அதற்கு 5% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும்.
மீன் எண்ணெய்த் தயாரிப்பில் உற்பத்தியாகும் துணை விளைபொருளுக்கான (Fish soluble paste) சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதத்திலிருந்து 5% ஆகக் குறைக்கப் பட்டது.
புடவை நூல்கள் /நூல் இழைகளுக்கானச் சரக்கு மற்றும் சேவை வரியானது சுமார் 12 சதவீதத்திலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டது.