TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி மறுசீரமைப்பு

August 18 , 2025 3 days 60 0
  • நிதி அமைச்சகமானது, "தரநிலை" மற்றும் "தகுதி" நிலைகளுடன் எளிமைப்படுத்தப் பட்ட இரண்டு அடுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை முன்மொழிந்துள்ளது.
  • இரண்டு முதன்மை நிலைகளுக்கு வெளியே உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சரக்குகளுக்கு சிறப்பு விகிதங்கள் பேணப்படும்.
  • மலிவுத் தன்மை மற்றும் நுகர்வை அதிகரிக்க பொதுவான வீட்டு மற்றும் நுகர்வோர் வாங்க விரும்பும் பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைக்கும் திட்டங்கள் உள்ளன.
  • இழப்பீட்டு வீத வரியின் ரத்து ஆனது விகிதச் சீரமைப்பிற்கான நிதி சார் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.
  • உள்ளீட்டு வரி வரவின் திரட்சியைக் குறைக்க தலைகீழ் வரிக் கட்டமைப்புகளை சரிசெய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போதைய நான்கு அடுக்கு முறை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகும்.
  • இனி 5% மற்றும் 18% அடுக்குகள் மட்டுமே தக்க வைக்கப்படும்.
  • இது 12% மற்றும் 28% வரி வரம்புகளை முற்றிலுமாக நீக்குவதை உள்ளடக்கும்.
  • 1%க்கும் குறைவான சலுகை விகிதம் மற்றும் ஐந்து முதல் ஏழு பொருட்களுக்கு 40% என்ற அதிக "பாவ வரி விகிதம்" அறிமுகப்படுத்தப்படும்.
  • தற்போது 12% அடுக்கில் உள்ள 99% பொருட்கள் 5% விகிதத்திற்கு மாற்றப்படும், மேலும் 28% அடைப்பில் உள்ள 90% பொருட்கள் மற்றும் சேவைகள் 18%க்கு மாற்றப்படும்.
  • இனி ஜிஎஸ்டி விகிதங்களுக்கு மேல் எந்த வகையான வரியும் இருக்காது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்