சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பீடு பெறும் முதல் ஐந்து மாநிலங்கள்
February 5 , 2023 983 days 533 0
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான ஐந்தாண்டு கால நிலைமாற்றக் காலகட்டத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பீடு பெறும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியானது 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று அறிமுகப் படுத்தப் பட்டது.
இந்தப் புதிய வரி விதிப்பு அமலாக்கத்தின் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு ஈடு செய்யப் படுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிலை மாற்றக் காலம் 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியன்று முடிவடைந்தது.
2015-16 ஆம் ஆண்டினை அடிப்படை ஆண்டாகக் கொண்ட 14% வருடாந்திர வளர்ச்சி மற்றும் உண்மையான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்ட வருவாய் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடாக இது கணக்கிடப் படுகிறது.
குறிப்பிட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான GST இழப்பீடு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் மாநிலங்களுக்கான இழப்பீடு பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த அறிக்கையில் பகிரப்பட்ட தரவுகளின்படி, தமிழ்நாடு மாநிலமானது, இந்த நிலை மாற்றக் காலகட்டத்தில் சுமார் 40,000 கோடி ரூபாய் தொகையினை இழப்பீடாகப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றினைத் தொடர்ந்து அதிக இழப்பீடு பெறும் நான்காவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.