வங்காள எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாய் அவரது 150வது பிறந்தநாளில் நினைவு கூரப் பட்டார்.
1876 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று வங்காளத்தில் உள்ள தேபானந்தபூரில் பிறந்த இவர், ஒரு வங்காள நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.
தேவதாஸ், ஸ்ரீகாந்தா, பரிணீதா, சோரித்ரோஹின் மற்றும் பதேர் தாபி ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
அவரது படைப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் இந்தியாவை, குறிப்பாக கிராமப்புற வங்காள சமுதாயத்தை சித்தரித்தன, மேலும் சமூகப் பிரச்சினைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை எடுத்துரைத்தன.
அவர் 13 ஆண்டுகள் பர்மாவில் (மியான்மர்) வாழ்ந்தார் மற்றும் 1916 ஆம் ஆண்டில் முழு நேர எழுத்தாளராக மாறுவதற்காக கல்கத்தா திரும்பினார்.
1926 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பதேர் தாபி (Pather Dabi), அதன் புரட்சிகரமான கருத்துரு காரணமாக பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டது.
அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருந்து ஜகத்தாரிணி தங்கப் பதக்கத்தையும், டாக்கா பல்கலைக்கழகத்தில் இருந்து இலக்கியத்திற்கான முனைவர் (கௌரவ) பட்டத்தையும் பெற்றார்.