TNPSC Thervupettagam
August 9 , 2019 2107 days 1240 0
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 அன்று சரத்து 370 தொடர்பான 2 சட்டப்பூர்வத் தீர்மானங்களை மத்திய உள்துறை அமைச்சர் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.  2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று இந்த 2 தீர்மானங்களும் மக்களவையால் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள் பின்வருமாறு:
    • ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தக்கூடிய அரசியலமைப்பு ஆணை, 2019 {ஆதாரம் சரத்து 370(1) இந்திய அரசியலமைப்பு} - சரத்து 370 தொடர்பான 1954 ஆம் ஆண்டின் உத்தரவை மேலோங்குவதற்காக இந்தியக் குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்டது.
    • இந்திய அரசியலமைப்பின் சரத்து 370ஐ நீக்குவதற்கான தீர்மானம் {ஆதாரம் சரத்து 370 (3)}

1954 ஆம் ஆண்டின் ஆணை

  • 1954 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் ஆணையானது ஜம்மு காஷ்மீர் உருவாக்கத்திற்கான ஒரு அடிப்படை சட்ட ஆவணத்தை உருவாக்கியது.
  • ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தக் கூடிய அரசியலமைப்பு ஆணை, 1954 ஆனது ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தக்கூடிய சரத்துகள் மற்றும் விதிமுறைகளைப் பட்டியலிடுகின்றது.
  • இந்த உத்தரவின்படி, இந்திய அரசியலமைப்பின்  சரத்து 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றது.
  • இந்த சரத்து இதை ஒரு தற்காலிக ஏற்பாடாக விவரித்துள்ளது. குடியரசுத் தலைவர் இது குறித்த ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டால் இந்த சிறப்பு அந்தஸ்து முடிவுக்கு வந்து விடும்.
  • சரத்து 370 ஆனது ஜம்மு காஷ்மீருக்கான ஒரு தனிப்பட்ட அரசியலமைப்பை உருவாக்க வழிவகை செய்துள்ளது. ஜம்மு காஷமீர் மாநில அரசின் இசைவு இல்லாமல் பாராளுமன்றத்தால் உருவாக்கப்படும் அனைத்துச் சட்டங்களும் ஜம்மு காஷ்மீருக்குத் தானாகவேப் பொருந்தாது.
  • இந்தச் சிறப்பு நடவடிக்கைகளை அம்மாநிலத்தின் அரசியலமைப்புச் சபையின் படி அல்லது அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையின் படி ஜம்மு காஷ்மீரின் சதர்-இ-ரியாசத்தின் (மன்னர்) பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.

சரத்து 35

  • 1954 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பின் சரத்து 35 -ன் கீழ் சில விதிவிலக்குகள் அடங்கிய ஒரு தொகுப்பையும் பட்டியலிட்டுள்ளார் (இந்த சரத்து இந்திய அரசியலமைப்பின் ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஜம்மு காஷமீர் அரசியலமைப்பில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது).
  • இது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சேர்க்கப் படாமல் 1954 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஆணையின் மூலமாக இணைக்கப் பட்டது.
  • இது பின்வருபவை போன்ற ஜம்மு காஷமீர் மாநிலத்தின் பிரத்தியேக சட்டங்களைப் பாதுகாக்கின்றது.
    • வெளி மாநில மக்கள் இங்கு சொத்துகள் வாங்குவது மீதான தடை
    • காஷ்மீர் பெண்கள் காஷ்மீர் அல்லாதவர்களைத் திருமணம் செய்தால், அவர்களின் சொத்து உரிமைகள் இழப்பு.

2019 ஆம் ஆண்டின் ஆணை

  • இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் இந்திய அரசியலமைப்பின் சரத்து 370(1)ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • இந்த விதி ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தக்கூடிய விவகாரங்களைக் குறிப்பிட குடியரசுத் தலைவரை அனுமதிக்கின்றது.
  • இதை ஜம்மு காஷ்மீர் அரசின் இசைவுடன் மட்டுமே வெளியிட முடியும்.  இந்த அறிவிக்கையானது, “ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் இசைவுடன்” என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றது.
  • தற்பொழுது ஜம்மு காஷ்மீர் மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ், அம்மாநில ஆளுநரால் நிர்வகிக்கப்படுவதால், அம்மாநில அரசின் சார்பில் ஆளுநர் தனது இசைவைத் தெரிவித்துள்ளார்.
  • இந்த ஆணை  1954 ஆம் ஆண்டின் ஆணையை மேலோங்க முயல்கின்றது.
  • இந்த ஆணையின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான ஒரு தனிப்பட்ட “அரசியலமைப்பின்” அடிப்படையில் உருவாக்கப்பட்ட அனைத்து அம்சங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • இந்திய அரசியலமைப்பின் அனைத்து அம்சங்களும் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என்று இந்த ஆணை அறிவிக்கின்றது.

2019 ஆம் ஆண்டின் ஆணையை ஆதரிக்கக் கூடிய சிறப்பு நடவடிக்கைகள்

  • இந்திய அரசியலமைப்பின் சரத்து 367 உடன் சில விதிகள் சேர்க்கப்பட்டுள்ளனசரத்து 367 ஆனதுபொருள் விளக்கங்களைக்கொண்டுள்ளது.
  • அமைச்சரவைக் குழுவின் அறிவுரையின்படி செயல்படும் சதர்--ரியாசத் பற்றிய அனைத்துக் குறிப்புகளும், இனிமேல் அம்மாநிலத்தின்ஆளுநரைக்குறிப்பிடுவதாகக்  கருப்படும்.
  • மாநில அரசைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளும் இனிமேல் ஆளுநர்என்பதைக் குறிக்கும்.
  • சரத்து 370(3) ஆனது அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே குடியரசுத் தலைவர் சரத்து 370ஐ ஜம்மு காஷ்மீரில் இனி செயல்படாது என்று அறிவிக்க முடியும் என்று கூறுகின்றது.
  • அரசியலமைப்புச் சபைபற்றிய குறிப்புகள் தற்போது மாநிலத்தின் சட்டசபைஎன்று குறிப்பிடப் படுவதற்காகத் திருத்தப்பட்டுள்ளது.
  • தற்பொழுது மாநில சட்டமன்றம் செயல்படாததால், அம்மாநில ஆளுநர் முக்கியப் பங்கு வகிக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்