சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையங்களின் மதிப்பாய்வு 2023
January 6 , 2024 670 days 536 0
ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்கள் இந்தப் பட்டியலில் உலக அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
82 சதவீதத்திற்கும் மேலாக சரியான நேரத்தில் விமான வருகைச் சேவையுடன் இண்டிகோ நிறுவனம் ஆசிய பசிபிக் விமான நிறுவனங்களில் நான்காவது இடத்தில் உள்ளது.
நடுத்தர விமான நிலையங்கள் பிரிவில் கொல்கத்தா விமான நிலையம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
உலகளாவிய விமான நிலையங்களில் அமெரிக்காவின் மினியாபோலிஸில் உள்ள செயின்ட் பால் விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் இடம் பெற்று உள்ளன.
கொலம்பியாவை சேர்ந்த ஏவியன்கா ஏர்லைன்ஸ் என்பது உலகளாவிய விமான நிறுவனங்களில் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் முதன்மையானது ஆகும்.