சர்க்கரை-இனிப்பு பானங்கள் மற்றும் மதுபானங்கள் மீதான வரிகள் பல நாடுகளில் குறைவாகவே உள்ளன என்பதைக் காட்டும் உலகளாவிய அறிக்கைகளை WHO அமைப்பு வெளியிட்டது.
குறைந்தது 116 நாடுகள் சர்க்கரைப் பானங்களுக்கு வரி விதிக்கின்றன, ஆனால் இந்த வரி சராசரியாக சுமார் 6–7% பங்கில் பொதுவாக சில்லறை விலையில் ஒரு சிறிய பங்கைக் கொண்டுள்ளது.
100% பழச்சாறுகள், இனிப்பு சேர்க்கப்பட்ட பால் மற்றும் குடிக்கத் தயாராக உள்ள தேநீர்/காபிகள் போன்ற பல உயர் சர்க்கரைப் பொருட்கள் பெரும்பாலும் வரியிலிருந்து விடுபடுகின்றன.
சுமார் 167 நாடுகளில் மது வரிகள் விதிக்கப்படுகின்றன, ஆனால் பணவீக்கம் அல்லது வருமான வளர்ச்சிக்கு ஏற்ப வரிகள் ஈடுசெய்யப்படாததால் பல இடங்களில் விலைகள் குறைவாகவோ அல்லது மாறாமலோ உள்ளன.
இந்த அறிக்கைகள் குறைந்த வரி அளவுகளை ஆரோக்கியமற்ற பானங்களின் நுகர்வு அதிகரிப்புடன் இணைக்கின்றன என்பதோடுஇது உடல் பருமன், நீரிழிவு நோய், இருதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் காயங்களுக்குப் பங்களிக்கிறது.
அதிகமாக மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வரிகள் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் நுகர்வைக் குறைக்கவும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுகாதாரச் சேவைகளுக்கான வருவாயை உருவாக்கவும் உதவும்.