சர்க்கரை தொழில்துறைகளுக்கான உரிமக் கட்டுப்பாடு நீக்கம் – மத்திய அரசு
August 5 , 2021 1471 days 529 0
நாட்டில் புதிய சர்க்கரை ஆலைகள் நிறுவுவதை ஊக்குவிக்கும் வகையில் சர்க்கரை தொழில்துறைகளுக்கு உரிமக் கட்டுப்பாடு முறையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
அதிக கரும்பு உற்பத்தி எனும் சிக்கலுக்கு ஒரு நீண்டகால தீர்வாக பெட்ரோலுடன் எத்தனாலைக் கலப்பதற்கான ஒரு செயல்முறைக்காக வேண்டி மிதமிஞ்சிய கரும்புகளைப் பயன்படுத்துவதற்கு சர்க்கரை ஆலைககளை அரசு ஊக்குவிக்கிறது.
இது ஒரு பசுமை எரிபொருளாக மட்டுமின்றி கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் அந்நிய செலாவணியையும் மிச்சப்படுத்த உதவும்.