சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு தங்களது துறைகளில் பங்களிப்பை ஆற்றியோரை கௌரவிக்கும் ஒரு உயரிய குடிமக்கள் விருதாகும்.
சர்தார் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இந்த விருது அறிவிக்கப்பட இருக்கின்றது.
நோக்கம்
இந்த விருதானது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கான காரணத்தை மேம்படுத்துவதற்கும் வலுவான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க மற்றும் ஊக்கமளிக்கும் பங்களிப்புகளை அங்கீகரிக்க முயல்கின்றது.
இந்த விருதானது பத்ம விருதுகளுடன் இணைந்து இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட இருக்கின்றது.
இந்த விருது பற்றி
இந்த விருதானது ஒரு பதக்கம் மற்றும் சான்றிதழைக் கொண்டிருக்கும். இந்த விருதானது ஊக்கமளிப்புத் தொகை எதையும் (நிதி) கொண்டிருக்காது.
இந்த விருது ஒரு வருடத்தில் மூன்று நபர்களுக்கு மேல் வழங்கப் படமாட்டாது.
நாட்டில் உள்ள எந்தவொரு இந்தியர் அல்லது எந்தவொரு இந்திய நிறுவனமும் இந்த விருதைப் பெறுவதற்காக ஒரு நபரைப் பரிந்துரைக்கலாம்.
இந்த விருதானது அரிதான மற்றும் மிகவும் தகுதியான சூழ்நிலைகளைத் தவிர, மரணத்திற்குப் பின் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது.