சர்வதேசக் கடற்கரை தூய்மையாக்கல் தினம் – செப்டம்பர் 19
September 22 , 2020 1924 days 619 0
சர்வதேசக் கடற்கரை தூய்மையாக்கல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் 3வது சனிக்கிழமையன்று நிகழ்கின்றது.
இது உலகில் அனுசரிக்கப்படும் மிகப்பெரிய ஒற்றை நாள் தன்னார்வ நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகின்றது.
இது 1986 ஆம் ஆண்டில் லிண்டா மாரானிஸ் என்பவர் கடல் பாதுகாப்பிற்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கத்தே ஓ ஹாரா என்பவரைச் சந்தித்த போது தொடங்கப் பட்டது.
ஓ ஹாரா “கடலில் நெகிழிகள் : கழிவுப் பிரச்சினையை விட அதிகமானது” என்ற ஒரு அறிக்கையை சமீபத்தில் முடித்து வெளியிட்டுள்ளார்.
இந்த இருவரும் மற்ற கடல் அறிஞர்களுடன் இணைந்து கடல் பாதுகாப்பிற்கான தூய்மையாக்கல் பணியை ஒருங்கிணைத்துள்ளனர்.