TNPSC Thervupettagam

சர்வதேசக் கடற்படுகை ஆணையத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவு

August 11 , 2025 15 hrs 0 min 33 0
  • சர்வதேசக் கடற்படுகை ஆணையம் (ISA) ஆனது, அதன் 30வது சட்டமன்ற அமர்வை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று நிறைவு செய்தது.
  • ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான உடன்படிக்கையின் (UNCLOS) கீழ் ISA உருவாக்கப்பட்டதன் 30 ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக இந்த அமர்வு நடத்தப் பட்டது.
  • நிலைத்தன்மை மற்றும் நியாயமான பலன் பகிர்வை ஆதரிப்பதற்காக ISA ஒரு பொதுவான பாரம்பரிய நிதி தொடர்பான பணிகளை முன்னெடுத்தது.
  • கடற்படுகைச் சுரங்கத்தின் தாக்கங்களை மதிப்பிடுவதற்காக ஒரு பொருளாதாரத் திட்டமிடல் ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தது.
  • நவம்பர் 01 ஆம் தேதியானது, அதிகாரப்பூர்வமாக சர்வதேச ஆழ்கடல் தள தினமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • ISA ஆனது, உலகின் 54% பெருங்கடல்களை உள்ளடக்கிய தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள கடற்படுகை சார்ந்த கனிம வளங்களை நிர்வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்