சர்வதேசக் கடற்படுகை ஆணையத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவு
August 11 , 2025 130 days 169 0
சர்வதேசக் கடற்படுகை ஆணையம் (ISA) ஆனது, அதன் 30வது சட்டமன்ற அமர்வை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று நிறைவு செய்தது.
ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான உடன்படிக்கையின் (UNCLOS) கீழ் ISA உருவாக்கப்பட்டதன் 30 ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக இந்த அமர்வு நடத்தப் பட்டது.
நிலைத்தன்மை மற்றும் நியாயமான பலன் பகிர்வை ஆதரிப்பதற்காக ISA ஒரு பொதுவான பாரம்பரிய நிதி தொடர்பான பணிகளை முன்னெடுத்தது.
கடற்படுகைச் சுரங்கத்தின் தாக்கங்களை மதிப்பிடுவதற்காக ஒரு பொருளாதாரத் திட்டமிடல் ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தது.
நவம்பர் 01 ஆம் தேதியானது, அதிகாரப்பூர்வமாக சர்வதேச ஆழ்கடல் தள தினமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
ISA ஆனது, உலகின் 54% பெருங்கடல்களை உள்ளடக்கிய தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள கடற்படுகை சார்ந்த கனிம வளங்களை நிர்வகிக்கிறது.