1889-ஆம் ஆண்டு சர்வதேசப் பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (UNGA) 2018-ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
சட்டங்களை உருவாக்குதல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பாராளுமன்றங்களின் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.
1976 ஆம் ஆண்டு முதல், பாராளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகளுக்கான IPU குழு, மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காகச் செயல்பட்டு வருகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு "Bring Human Rights into Focus" என்பதாகும்.