TNPSC Thervupettagam

சர்வதேசப் புலம்பெயர்வு கண்ணோட்ட அறிக்கை 2025

November 12 , 2025 5 days 42 0
  • 2025 ஆம் ஆண்டு சர்வதேசப் புலம்பெயர்வு கண்ணோட்ட அறிக்கையானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (OECD) வெளியிடப் பட்டது.
  • OECD நாடுகளுக்கான நிரந்தரப் புலம்பெயர்வு 2024 ஆம் ஆண்டில் 4% குறைந்து 6.2 மில்லியனாக இருந்தது ஆனால் இது 2019 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 15% அதிகமாக இருந்தது.
  • குடும்ப மறு ஒருங்கிணைப்பு ஆனது புலம்பெயர்வுக்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்த அதே நேரத்தில் தொழிலாளர் புலம்பெயர்வு 21% குறைந்துள்ளது மற்றும் மனிதாபிமான நடவடிக்கை சார்ந்த புலம்பெயர்வு 23% அதிகரித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் புகலிட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3 மில்லியனை எட்டியது என்ற நிலையில் அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்காவில் தாக்கல் செய்யப் பட்டன.
  • இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை இதில் அதிகமான அளவு பங்களிப்பாளர்களாக உள்ள நிலையில், ஆசியாவானது புலம்பெயர்ந்த சுகாதார நிபுணர்களின் முன்னணி ஆதாரமாகத் தொடர்ந்து திகழ்கிறது.
  • 2023 ஆம் ஆண்டில், சுமார் 600,000 இந்தியர்களுடன் OECD நாடுகளுக்கான புதிய குடியேறிகளுக்கான முதன்மையான மூல நாடாக இந்தியா உருவெடுத்தது.
  • இது முந்தைய ஆண்டை விட 8% அதிகம் ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டில் OECD நாடுகளில் புகலிடம் தேடுபவர்களுக்கான முதன்மையான மூல நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்