சர்வதேசப் பேரிடர் அபாயக் குறைப்பு தினம் - அக்டோபர் 13
October 13 , 2019 2135 days 643 0
அக்டோபர் 13 ஆம் தேதியன்று சர்வதேசப் பேரிடர் அபாயக் குறைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஆபத்து குறித்து அறிதல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு ஆகியவற்றை நோக்கிய ஒரு உலகளாவியக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படைச் சேவைகளை சீர்குலைத்தல் ஆகியவற்றிற்கான பேரிடர் சேதத்தைக் குறைத்தல்” என்பதாகும்.
1989 ஆம் ஆண்டில், பேரிடர் அபாயக் குறைப்பிற்கான சர்வதேச தினமானது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் நிறுவப்பட்டது.
செண்டாய்க் கட்டமைப்பின் (2015 - 2030) ஏழு இலக்குகளை மையமாகக் கொண்ட பேரிடர் அபாயக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினால் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “செண்டாய் ஏழு” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டுப் பதிப்பு தொடர்கின்றது.