சர்வதேசப் பொது சுகாதார வழங்கீட்டுத் தினம் - டிசம்பர் 12
December 18 , 2022 889 days 313 0
உலகளவில் வலுவான, நெகிழ்திறன்மிக்க, உலகத் தரம் வாய்ந்த சுகாதார அமைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
பல பங்குதார நிறுவனங்களுடன் சேர்ந்து வலுவான மற்றும் நெகிழ்திறன் மிக்க சுகாதார அமைப்புகள் மற்றும் பொது சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் தேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "நாம் விரும்பும் உலகை உருவாக்குங்கள்: அனைவருக்குமான ஆரோக்கியமான எதிர்காலம்"என்பதாகும்.