சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து தினம் 2023 – டிசம்பர் 07
December 9 , 2023 749 days 306 0
இது 1944 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) நிறுவப்பட்ட நாளையும், அதன் தனித்துவமானப் பங்கினையும் நினைவு கூருகிறது.
ICAO என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமாகும்.
1994 ஆம் ஆண்டு டிசம்பர் 07 ஆம் தேதியன்று, சிகாகோ உடன்படிக்கையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ICAO முதல் முறையாக சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து தினத்தை அனுசரித்தது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “உலகளாவிய விமானப் போக்குவரத்து மேம்பாட்டிற்கான புதுமைகளை மேம்படுத்துதல்” என்பதாகும்.