சர்வதேசப் போக்குவரத்து மன்றத்தின் போக்குவரத்துக் கண்ணோட்ட அறிக்கை 2023
May 29 , 2023 813 days 404 0
2015 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுப் காட்டப்பட்ட பல இலக்குகளை அடைவதில் போக்குவரத்தின் கார்பன் நீக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
OECD அமைப்பில் உள்ள சர்வதேசப் போக்குவரத்து மன்றம் (ITF) ஆனது அதிகளவில் எதிர் பார்க்கப்பட்ட அதன் ITF போக்குவரத்துக் கண்ணோட்டம் (2023) என்ற அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
போக்குவரத்தில் நிலையானத் தெரிவுகளை மேம்படுத்துவதற்கான கொள்கைகளின் கலவை நுட்பத்தினை ஏற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தை இது எடுத்துரைக்கிறது.
தற்போதைய கொள்கைகளுடன் ஒப்பிடச் செய்கையில் முக்கிய உள் கட்டமைப்புகளில், போக்குவரத்துத் துறையினை கார்பன் நீக்கம் செய்வதற்காக வேண்டி இலட்சியமிக்க கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு, 5% குறைவான முதலீடு தேவைப்படும்.