சர்வதேச அணு ஆயுதச் சோதனைகளுக்கு எதிரான தினம் – ஆகஸ்ட் 29
August 29 , 2020 1783 days 623 0
இது அணு ஆயுத வெடிப்புச் சோதனைகள் அல்லது எந்தவொரு இதர அணு ஆயுத வெடிப்புகளின் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது முதன்முறையாக 2010 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது. அன்று முதல் இது ஒவ்வொரு ஆண்டும் அணு ஆயுத சோதனையைத் தடை செய்வதற்கான தேவையை வலியுறுத்தி அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இது 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று கஜகஸ்தான் நாட்டில் செமிபாலடின்ஸ்க் என்ற அணு ஆயுத சோதனைத் தளம் (பாலிகோன் எனப்படும் தளம்) மூடப்பட்டதை அனுசரிக்கின்றது.