சர்வதேச அமைதிக்கான பன்முகத் தன்மை மற்றும் அரசுமுறை உறவுகள் தினம் - ஏப்ரல் 24
April 27 , 2023 887 days 298 0
இந்தத் தினமானது, நாடுகளுக்கிடையேயான மோதல்களை அமைதியான வழிகளில் தீர்க்கும் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்த முயல்கிறது.
நாடுகளுக்கிடையேயான மோதல்களுக்கு அமைதியான முறையில் பல தீர்வுகளை அடைவதில், பலதரப்பு சார்ந்த ஒரு முடிவினை மேற்கொள்தல் மற்றும் அரசுமுறை நடவடிக்கைகள் ஆகியவற்றின் பயன்பாட்டினை இது அங்கீகரிக்கிறது.
பன்முகத் தன்மை என்பது ஆலோசனை, உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமை போன்ற அடிப்படைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
இத்தினமானது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
மேலும் இந்தத் தினமானது முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.