அருங்காட்சியகங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் தேதியன்று சர்வதேச அருங்காட்சியக தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
கலாச்சாரப் பரிமாற்றத்திற்கும் மக்களிடையேயான பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்குமான ஒரு முக்கிய வழியாக அருங்காட்சியகங்கள் உள்ளன.
2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அருங்காட்சியகங்களின் வருங்காலம் : மீட்டெடுத்தல் மற்றும் மறுசீரமைத்தல்” என்பதாகும்.