சர்வதேச அறிவியல் மற்றும் அமைதி வாரம் - நவம்பர் 09 முதல் 14 வரை
November 10 , 2021 1426 days 589 0
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை, சர்வதேச அறிவியல் மற்றும் அமைதி வாரமானது உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
இந்தச் சிறப்பு வாரமானது, மக்கள் தங்கள் சொந்த நாடுகளில் அமைதியை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிக்கான சிறந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் வேண்டி ஊக்கமளிக்கிறது.
1986 ஆம் ஆண்டு சர்வதேச அமைதி ஆண்டாக அனுசரிக்கப்படுவதன் ஒரு பகுதியாக அறிவியல் மற்றும் அமைதிக்கான சர்வதேச வாரமானது முதன்முதலில் அனுசரிக்கப் பட்டது.