சர்வதேச அல்பினிசம் நோய் விழிப்புணர்வு தினம் 2026 – ஜூன் 13
June 16 , 2026 14 hrs 0 min 37 0
அல்பினிசம் (வெண்மைக் குறைபாடு/தோல் வெளிறல்) நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அல்பினிசம் நோய் உள்ளவர்களின் உரிமைகள், கண்ணியம், சமத்துவம் மற்றும் அவர்களை அனைத்திலும் உள்ளடக்குதலை ஊக்குவிப்பதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இது அறிவிக்கப் பட்டது, மேலும் இது ஆண்டுதோறும் ஜூன் 13 அன்று அனுசரிக்கப் படுகிறது.
அல்பினிசம் என்பது தோல், முடி மற்றும் கண்களில் மெலனின் நிறமி குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதை குறிக்கும் ஒரு அரிய, தொற்றாத மரபணு நிலை ஆகும்.
அல்பினிசம் உள்ளவர்கள் பெரும்பாலும் பார்வைக் குறைபாடு, தோல் புற்றுநோய்க்கான அதிக ஆபத்து, பாகுபாடு, களங்கம் மற்றும் சமூகப் புறக்கணிப்பு ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.
2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு "Proudly in my skin – celebrating all skin tones" என்பதாகும்.