சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் ஆயுதப் பரவல் தடுப்பு விழிப்புணர்வு தினம் - மார்ச் 05
March 12 , 2023 1024 days 391 0
இது பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே ஆயுதக் குறைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்த சிறப்பான விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தச் செய்வதற்கும், ஆயுத மோதல்களைத் தடுப்பதற்கும் அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் ஆயுதங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆயுதக் குறைப்பு தொடர்பான சில முயற்சிகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இது உதவுகிறது.
2021 ஆம் ஆண்டில், உலகளாவிய நாடுகளின் இராணுவச் செலவினமானது 2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியதோடு, மேலும், 12,700 அணு ஆயுதங்கள் மனித குலத்திற்கான ஒரு நிலையான அச்சுறுத்தலாக இருக்கின்றன.