3வது சர்வதேச உத்தி சார் ஈடுபாட்டு நிகழ்வானது (IN-STEP) புது டெல்லியில் நடைபெற்றது.
IN-STEP என்பது இந்தியா மற்றும் வெளிநாட்டு நட்பு நாடுகளைச் சேர்ந்த மூத்த தேசியப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான ஓர் உத்தி சார் பேச்சுவார்த்தை தளமாகும்.
பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு, பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடு போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உத்தி சார் ஒத்துழைப்பில் இந்த முன்னெடுப்பு கவனம் செலுத்தியது.
IN-STEP என்பது உத்தி சார் சிந்தனையாளர்களை ஊக்குவிப்பதையும், உலகளாவிய தெற்கு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.