TNPSC Thervupettagam

சர்வதேச உயிர்க்கோளக் காப்பக தினம் 2025 – நவம்பர் 03

November 7 , 2025 20 days 100 0
  • உயிர்க்கோளக் காப்பகங்களின் முக்கியத்துவம், வளங்காப்பு மற்றும் நிலையான மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • இது 2021 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ பொது மாநாட்டினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இந்த நாளுக்கான முன்மொழிவு ஆனது ஸ்பெயின் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளால் கூட்டாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
  • 136 நாடுகளில் பரவியுள்ள உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பில் (WNBR) 759 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
  • இந்தியாவில் 18 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன, அவற்றில் 13 யுனெஸ்கோவின் WNBR வலையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா முழுவதும் பரவியுள்ள நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம், இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகம் ஆகும்.
  • 2025 ஆம் ஆண்டில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் WNBR வலையமைப்பில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட இந்தியத் தளமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்