சர்வதேச உயிர்க்கோள வளங்காப்பகங்கள் தினம் - நவம்பர் 03
November 6 , 2023 692 days 305 0
உயிர்க்கோள வளங்காப்பகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அவற்றின் வளங்காப்பு மற்றும் நிலையானப் பயன்பாட்டை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் அறிக்கையின் படி, 22 பன்னாட்டுத் தளங்கள் உட்பட 134 நாடுகளில் தற்போது 748 உயிர்க்கோள வளங்காப்பகங்கள் உள்ளன.
அவை 134 நாடுகளில் உள்ள 250 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன; இந்தியாவில் மட்டும் 12 தளங்கள் உள்ளன.
சமீபத்தில் யுனெஸ்கோ மற்றும் இந்தியா ஆகியவை இணைந்து 10வது தெற்கு மற்றும் மத்திய ஆசிய உயிர்க்கோள வளங்காப்பக வலையமைப்புக் கூட்டத்தினை (SACAM) “முகடு முதல் பவளப்பாறை வரை” என்ற கருத்துருவின் கீழ் சென்னையில் நடத்தியது.