TNPSC Thervupettagam

சர்வதேச கடல்பசு வளங்காப்பு மையம்

October 24 , 2025 12 days 53 0
  • சர்வதேச கடல்பசு/டுகோங் வளங்காப்பு மையம் ஆனது தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள சரபேந்திரராஜன்பட்டினம் கிராமத்தில் அமைக்கப் பட வனத்துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது கட்டுமானம் தடை செய்யப்பட்டுள்ள CRZ III (மேம்பாடுகள் இல்லாத மண்டலம்) உட்பட பல கடலோர ஒழுங்குமுறை மண்டலங்களுக்குள் (CRZ) அமைந்துள்ளது.
  • முன்மொழியப்பட்ட பகுதியானது சுமார் 23,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டு உள்ளது.
  • இதில் அருங்காட்சியகம், அரங்கம், சுற்றுச்சூழல் மையம் மற்றும் காட்சிப் பாதைகள் போன்ற ஆராய்ச்சி, கல்வி மற்றும் பொழுதுபோக்கு உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.
  • இந்த இடமானது சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் கொண்ட மற்றும் 2011 ஆம் ஆண்டு CRZ அறிவிப்பின் கீழ் பாதுகாக்கப் படுகின்ற கடல் புல் படுகைகள், ஓத ஆறுகள் மற்றும் சதுப்புநிலக் காடுகளுக்கு அருகில் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்