சர்வதேச கல்லீரல் அதிகொழுப்பு படிவு நோய் தினம் - ஜூன் 13
June 18 , 2024 398 days 249 0
இது ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று அனுசரிக்கப் படுகிறது.
கல்லீரல் அதிகொழுப்பு படிவு நோயானது வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், இருதய ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயம் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளது.
இந்த கோளாறு ஆனது தற்போது சரியான முறையில் மறுவகைப்படுத்தப்பட்டு, 'வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய, கொழுப்புகளைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலையிலான கல்லீரல் நோய்' (MASLD) என அழைக்கப்படுகிறது.
உலகளாவிய MASLD நோய்ப் பாதிப்பு 25-30% என மதிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள இளம் பருவத்தினரிடையே கல்லீரல் கொழுப்பு படிவு நோய்ப் பாதிப்பு 38.6% ஆகவும், பருமனான குழந்தைகளிடையே இது 36% ஆகவும் இருந்தது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Act Now, Screen Today' என்பதாகும்.