சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் வருடாந்திர விருதுகள் – 2019
December 21 , 2019 2038 days 782 0
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான எலிஸ் பெர்ரி என்பவர் சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் (International Cricket Council - ICC) இந்த ஆண்டின் மகளிர் கிரிக்கெட் வீரருக்கான ரேச்சல் ஹேஹோ - பிளின்ட் என்ற விருதை வென்றுள்ளார்.
இவர் ICCயின் மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராகவும் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
பெர்ரி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளில் 2வது முறையாக (2017ல் முதல்முறையாக) ரேச்சல் ஹேஹோ - பிளின்ட் என்ற விருதை வென்றுள்ளார்.
ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான அலிஸா ஹீலி என்பவர் இந்த ஆண்டின் டி20 கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
இந்த ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராகத் தாய்லாந்தைச் சேர்ந்த சனிதா சுத்திருங் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
மெக் லான்னிங் என்பவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அணித் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.