அமலாக்க இயக்குநரகம் (ED) ஆனது சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பிலிருந்து (இன்டர்போல்) அதன் முதல் ஊதா அறிக்கையினைப் பெற்றுள்ளது.
உலக நாடுகளில் செயல்படும் புதிதாக அடையாளம் காணப்பட்ட, வர்த்தக அடிப்படையிலான பணமோசடி (TBML) வலையமைப்பு குறித்து 196 உறுப்பினர் நாடுகளுக்கு ஊதா அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது.
சட்டவிரோத நிதிகளை இடம் மாற்ற போலி/ஷெல் நிறுவனங்கள் எவ்வாறு போலி வர்த்தக ஆவணங்கள், விலைப் பட்டியல் இல்லாத இறக்குமதிகள் மற்றும் சுழற்சி முறையிலான மறு ஏற்றுமதிகளைப் பயன்படுத்தின என்பதை இந்த அறிக்கை விவரிக்கிறது.
ஊதா அறிக்கையானது, உலகளாவிய நிறுவனங்கள் மறைமுக முறைகள் குறித்த உளவுத் துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது மற்றும் ARIN-AP மற்றும் குளோப் நெட்வொர்க் போன்ற வலையமைப்புகள் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.