சர்வதேச குழந்தைப் பருவப் புற்றுநோய் தினம் 2026 – பிப்ரவரி 15
February 20 , 2026 62 days 148 0
குழந்தைப் பருவப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஆரம்ப காலக் கண்டறிதலையும், சிகிச்சைக்கு சமமான அணுகலையும் ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் முதன்முதலில் 2002 ஆம் ஆண்டு சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் அமைப்புகளின் கூட்டமைப்பு (ICCCPO) ஆல் அங்கீகரிக்கப் பட்டது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 400,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
2030 ஆம் ஆண்டுக்குள் குழந்தைப் பருவப் புற்றுநோய் உயிர்வாழ்வு விகிதத்தை குறைந்தது சுமார் 60% ஆக உயர்த்துவதற்கான WHO-வின் இலக்கை இந்தத் தினம் ஆதரிக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Demonstrating Impact — From Challenge to Change" என்பதாகும்.