சர்வதேச குழந்தைப் பருவ கால புற்றுநோய் தினம் - பிப்ரவரி 15
February 16 , 2021 1632 days 541 0
குழந்தைப் பருவ கால புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தச் செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறப்பான இதன் 20வது பதிப்பில், குழந்தைப் பருவ கால புற்றுநோய் சர்வதேசம் மற்றும் சர்வதேச குழந்தைப் புற்றுநோயியல் சங்கம் ஆகியவை இணைந்து மூன்று ஆண்டு கால பிரச்சாரத்தை வெளியிடுகின்றன.
இந்தப் பிரச்சாரமானது #throughourhands என்ற ஒரு கருத்துருவின் கீழ் திட்டமிடப் பட்டு உள்ளது.
குழந்தைப் பருவ கால புற்றுநோய் சர்வதேசம் என்பதின் பிரச்சாரமானது #CureAll என்ற உத்தியுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
இது குழந்தைப் பருவ கால புற்றுநோய்க்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய முன்முயற்சியின் ஒரு முக்கிய உத்தியாகும்.